சட்டத்தரணி சுமித் ரவீந்திர சில்வாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படும் காவி உடையில் இருந்த நபரை கைது செய்யுமாறு மிரிஹான பொலிஸாருக்கு நுகேகொடை நீதவான் அஜித் மனதுங்க இன்று உத்தரவிட்டார்.கோட்டே ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான சந்தேக நபர்களின் சார்பில் ஆஜராகுவதற்காக நீதிமன்றம் வந்தபோது சட்டத்தரணி சுமித் ரவீந்திரவை காவி உடையிலிருந்த நபர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹேமந்த வர்ணகுலசூரிய, நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பதில் தலைவர் மேர்வின் டி சில்வா மற்றும் சட்டத்தரணிகளான இந்திரஜித் அமரகோண், அருண மல்லவராச்சி, வில்ஸன் குணவர்தன ஆகியோரின் கோரிக்கைகளை கருத்திற்கொண்ட நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
.gif)
