தலைமையக இன்ஸ்பெக்டர்கள் மூவரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.கடவத்த, உதுகம தலைமையக பொலிஸ் நிலையங்கள் மற்றும் களுத்துறை பொலிஸ் கல்லூரியைச் சேர்ந்த தலைமையக இன்ஸ்பெக்டர்களே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ் சேவையின் தேவை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
.gif)
