Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 23 மே 2013

மாடுகளுக்கு பதிலாக கன்றுகளை மாற்றிய குற்றச்சாட்டு: வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்


                                             (சுபுன் டயஸ்)

வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மே 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இரு மாடுகளுக்குப் பதிலாக கன்றுகுட்டிகளை மாற்றிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வத்தளை மாபோல பிரதேசத்தில் சோதனையிடப்பட்டபோது 12 மாடுகள் கைப்பற்றப்பட்டன.

இதன் போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  எனினும் கைப்பற்றப்பட்ட மாடுகளை சிவில் பாதுகாப்புப் படையினரால் பராமரிக்கப்படும் பண்ணையொன்றில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுவரை வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி வசமிருந்த 12 மாடுகளில் இரு மாடுகளை சந்தேக நபர்களிடம் வழங்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக இரு கன்றுக்குட்டிகளை மாற்றி வைத்ததாகவும் இதற்காக 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும்  அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற பொருட்கள் தொடர்பான நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Views: 1743

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.