Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

எனக்கு எதிராக பாரிய சதித்திட்டம்: அமைச்சர் மேர்வின்

தனக்கு எதிராக புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தனக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டங்கள்  சிலரினால் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.

நடுநிலையாகச் செயற்படுமாறு ஊடகங்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளதுடன்,  அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பின்றி செய்திகளை வெளியிடுமாறும் அமைச்சர் மேர்வின் சில்வா  கூறியதாக அவரது ஊடகச் செயலாளர் ரெஹான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

'அவருக்கு எதிரான சதித்திட்டங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமையளிக்கின்றன. மக்களுக்கு நடுநிலையான தகவலையே வழங்க வேண்டும்' என அமைச்சர் கூறினார்.

மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு அறிவிப்பதற்கு பிரதேசசபையின் கடிதத்தலைப்புகளை அமைச்சர் மேர்வின் சில்வா பயன்படுத்தியதாக களனிப் பிரதேசசபைத் தலைவரினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

'எனக்கு போதுமானளவு மக்கள் உள்ளனர், போதுமானளவு புகழ் உண்டு, மக்களை திரட்டுவதற்கு இந்த உத்திகளை கையாள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த கடிதங்களுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் மீது அர்த்தமற்ற வகையில் அவர்கள் குற்றஞ்சாட்டாமல் அவர்கள் பொலிஸில் முறையிட வேண்டும். நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது, சட்ட அதிகாரிகள் உள்ளனர், அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்' என அமைச்சர் கூறினார்.
Views: 1839

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.