Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

இறக்கும்வரை முதலமைச்சராக பதவி வகிப்பேன்: பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க

வடமத்திய மாகாண முதலமைச்சராக நான்; இறக்கும் வரை பதவி வகிப்பேன் என கலைக்கப்பட்ட வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தார்.

'மக்கள் என்னுடன் இருக்கும்வரை நான் இறக்கும்வரை முதலமைச்சராக பதவி வகிப்பேன் என அநுராதபுரத்தில் தனது இல்லத்தில் நiபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிக்கு தன்னுடன் போட்டியிடுவதற்கு தனது கட்சியிலோ எதிர்க்கட்சியிலோ எவரும் இல்லை என அவர் கூறினார்.

'தேர்தலுக்கு அடுத்தநாள் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க, வடமத்திய மாகாண சபையின் முதலமச்சராவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எவரும் அதை மாற்ற முடியாது' என அவர் கூறினார்.

'அடுத்த முதலமைச்சர் பதவி குறித் ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அச்செய்திகளை எவரும் கருத்திற்கொள்ளக்கூடாது. நான் எப்போதும் முதலமைச்சராக இருப்பேன்' என அவர் கூறினார். (அதுல பண்டார)

Views: 1686

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.