(ஏ.எச்.எம். பௌஸான்)
16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை புலுகொட புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்த கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஆர்.டீ.ரவிந்து விஷ்மித கலாரங்க என்ற மாணவராவார்.
வேலைக்குச் செல்லும் தனது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு, தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் ரயிலால் மோதப்பட்டுள்ளார்.
.gif)
