(ஆர்.கமலி)அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமைக் காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹோல்புறூக் பிரதேசத்தில் பாயும் ஆற்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊட்டுவில் தோட்ட பச்ச பங்களா பிரிவை சேர்ந்த 60 வயதான கருப்பையா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இறந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரக்கறி மூடையொன்றை தூக்கிக் கொண்டு பாலமற்ற ஆற்றை கடக்க முற்பட்ட பொழுது, இவர் வழுக்கி விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
