Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

போலி நகைகளை அடகு வைத்த மூவர் கைது


(ஆர்.கமலி)

போலி நகைகளை அடகு வைத்து பணம் திரட்டிய இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்களை ஹட்டன் பொலிஸார் செய்துள்ளனர். தங்க முலாம் பூசப்பட்ட நிலையில் போலி நகைகளை நகை அடகு பிடிக்கும் இடங்களில் அடகு வைப்பதன் மூலம் பல இலட்சம் ரூபாய்களை திரட்டிய இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேச நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் போலியான தங்க நகைகளை வைத்து சுமார் 80 ஆயிரம் ரூபாவை பெற முயற்சித்த போது இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இந்த செயலை மிக நீண்ட காலமாக நாடலாவிய ரீதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்கள் ஏற்கனவே ஹட்டன் பிரதேசத்தில் நான்கு நகை அடகு பிடிக்கும் இடங்களில் போலியான நகைகளுக்கு சுமார் 12 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியமை உட்பட்ட 43 குற்றங்கள் தொடர்பில் வழக்குகளை எதிர்நோக்கி வருபவராவர்.

இவர்களை நேற்று இரவு ஹட்டன் நீதவான் முன்னிஇலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Views: 627

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.