எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த விஜய விதானகே, ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று இணைந்துகொண்டுள்ளார்.எதிர்வரும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தற்போதைய பதவியிலிருந்து மக்களுக்கு சேவையாற்றவது கடினம் என்பதை உணர்ந்ததால் தான் ஐ.தேக.வில் இணைவதற்கு தீர்மானித்தாக இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விஜய விதானகே கூறினார்.
'எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு என்னால் முடியாமல் போகலாம். ஆனால், எமது தலைமைத்துவம் மற்றும் எமது புத்தாக்க சிந்தனை ஆகியவற்றின் மூலம் மக்களை வலுப்படுத்த முடியும்' என அவர் தெரிவித்தார். (நிஷான் காஸிம்)
.gif)
