(எஸ்.தியாகு) நுவரெலியா கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.
தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இதனால் நாளை திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் பணிக்கு செல்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள்:
- அடுத்த வருடம் கொழுந்து அதிகமாக பறிக்கப்படும் காலத்தில் அதாவது 01.04.2013 தொழிற்சாலையை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
- தொழிற்சாலையின் முன்னேற்ற நிலைமை தொடர்பாக இரு சாராரும் இணைந்து (தொழிற் சங்கம், தோட்ட நிர்வாகம்) 2013 மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை அறிவது.
- சகல தொழிலாளர்களும் 25.06.2012 முதல் வேலைக்கு திரும்புவது.
- தொழிலாளர்களின் நடைமுறை செலவுக்காக 5,000 ரூபா முன் பணமாக வழங்குவது. அதில் 2000.00 ரூபாவை 25ஆம் திகதி வழங்குவது.
- அத்தோடு ஜீலை மாதம் 9ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் மிகுதி 3,000 ரூபாவை வழங்குவது. வழங்கப்படும் இந்த முற்பணத்தில் 2500 ரூபாவை மாத்திரம் மீளப் பெறுவதோடு அவை ஓகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாத சம்பளத்தில் இருந்து மூன்று தவணைகளில் கழிக்கப்படும்.
கடந்த மே மாதம் 28ம் திகதி முதல் பாக் தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.gif)
