.jpg)
(ஆர்.கமலி)
இன்றுக் காலை டயகம நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 40 கிலோ கிராம் ஆட்டிறச்சியை தலவாக்கலை மற்றும் ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆட்டிறச்சியுடன் அதனை கொண்டு சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார பரிசோகர்கள் தெரிவித்தனர்.
.gif)
