Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

அம்பதென்னை பிரதேச கடைத்தொகுதியில் தீ விபத்து


(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை, அம்பதென்னை பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த  கடைத்தொகுதியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அக்கடைத்தொகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், இருப்பினும் மின்னொழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிவடைந்துள்ளதாக கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 384

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.