Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

சிவனொளி பாதமலைக்கான யாத்திரைப் பருவக்காலம் நாளையுடன் பூர்த்தி

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பூரணைத்தினத்துடன் ஆரம்பமான சிவனொளி பாதமலைக்கான  யாத்திரைப் பருவக்காலம் நாளை ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு சிவனொளிபாதமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமன் தேவ விக்கிரகமும் மற்றும் பூஜைப்பொருட்களும் 8 ஆம் திகதி அதிகாலை சுப வேளையில் மலை உச்சியிலிருந்து மலையின் அடிவாரத்துக்குக்கொண்டு கொண்டு வரப்பட்டு பௌத்த மத்திய நிலையத்தில் விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து 9 ஆம் திகதி சமன் தேவ விக்கிரமமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதபவனி நல்லதண்ணி, மவுசாகலை, டபள்கட்டிங், லக்ஷபான, கலுகல, கிதுல்கல, யட்டியந்தோட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ஊடாக பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
Views: 369

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.