Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் மக்கள் பலத்தினால் முறியடிப்பேன்: திகாம்பரம் எம்.பி


(எஸ்.சுவர்ணஸ்ரீ)

'தோட்டத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் மே தினத்தில் கலந்துகொண்டு தலைவர்களை மகிழ்விப்பது போல தேர்தல் காலத்திலும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் இன்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின விழாவில் தலைமைவகித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நுவரெலியா சினிசிட்டா நகரசபை மண்டபத்திலிருந்து இடம்பெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் திரண்டிருந்தனர்.
 
தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன, மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா, பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர் ஜே.எம்.செபஸ்டியன், தேசிய அமைப்பாளர் சோ.ஸ்ரீதரன், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான இளைஞரகள் ஆதரவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், 'தொழிலாளர் வர்க்கத்தின் மே தின விழாவில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் மகனான நான், கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். தொழிலாளர் வர்க்கத்துக்காக சேவையாற்ற வந்துள்ள எனக்கோ, தொழிலாளர் வர்க்கத்துக்கோ துரோகம் செய்ய முற்படுபவர்களுக்கெதிராக துனிந்து குரல் கொடுத்துப் போராடத் தயாராகவுள்ளேன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் போது கம்பனிகளுக்கு சாதகமாக, அவர்களின் அனுகூலத்தை எதிர்பார்த்து செயற்படுகின்றவர்களால் தொழிலாளர்கள் போதுமான வேதனம் கிடைக்காமல் கஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இத்தகைய அநீதிகளுக்கெதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றேன். தொழிலாளர்களுக்கு உண்மையான சேவையாற்ற வந்துள்ள எனக்கு அச்சுறுத்தல்களும், இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் கண்டு நான் பயந்துவிடப்போவதில்லை. எத்தகைய தீய சக்திகள் வந்தாலும் எதிர்த்து நின்று தொடர்ந்தும் செயற்படத் தயாராகவுள்ளேன்.
 
என் மீது நம்பிக்கைவைத்து வாக்களித்த மக்களுக்கு மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் தகுந்த சேவையைத் தொடர்வேன். எனவே, தொழிலாளர்கள் மேதினத்துக்கு வருகை தந்து ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதைப் போல தேர்தல் காலத்தில் தமது சக்தியைக் காட்டுவதன் மூலம் மேலும் பல பிரதிநிதிகளை நாடாளுமன்றமத்துக்கும், மாகாணசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் தெரிவு செய்து தொழலாளர் தேசிய சங்கத்தின் பலத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்' என்றார்.
Views: 774

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.