Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முதூர் பெண்களுக்கு நிதியுதவி


(முறாசில்)

இலங்கை வாழ்கை மன்றமானது படகு கட்டுமான நிறுவனத்தின் அனுசரணையுடன் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒழுங்கு செய்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு மூதூரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் இலங்கை வாழ்கை மன்றத்தின் தலைவர் ஏ.அன்வர் தலைமையில் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீகின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'செப் நெட் சிறிலங்கா' நிறுவனத்தின் தலைவர் காமினி பி.கேரத், 'செப் நெட் சிறிலங்கா' நிறுவனத்தின் பிரதம திட்ட உதவியாளர் எம்.ஏ.அப்துல் அஹத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது முதல் கட்டமாக கணவரை இழந்த பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டது.
Views: 747

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.