Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு


(முறாசில்)
மூதூர் அரபா நகர் மீள் குடியேற்றக் கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரியின் வேண்டுகோலின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைரின் நிதி ஓதுக்கீட்டின் இவ் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அரபா நகர் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைர் எஸ்.எச்.தஸ்ரீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் இணைப்பாளர்  அப்துல் றஸ்ஸாக், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரி, அரபா நகர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஏ.சீ.மனாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Views: 969

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.