அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவும் ஏனைய 13 பேருக்கம் 16,530 ரூபா வீதம் இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 890 ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி நேற்று புதன்கிழமை உத்தவிட்டார்.மின்சாரசபையின் அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலய விசேட பிரிவும் மத்தியமுகாம் பொலிஸாரும் இணைந்து மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை விசேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 14 பேரை கைது செய்ததுடன் சட்டவிரோத மின்சார பாவனைக்காக பயன்படுத்தி மின்வயர்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
.gif)
