.jpg)
(ஜவீந்திரா)
ஏறாவூர் பற்று, கொடுவாமடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன. சுமார் 40 பயனாளிகளுக்கு குடிநீரை சேமிப்பதற்காக நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன.
இலங்கைகைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்ளப்பு மாவட்ட கிளையினால் முன்னெடுக்கப்படுகின்ற சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கமையவே நீர் தாங்கிகள் வழங்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேமகுமார் மற்றும் சுகாதாப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நீர் தாங்கிகளை கையளித்தனர்.
தற்போதைய வரட்சியான காலத்தில் நீரை சேமித்து பயன்படுத்துவதற்கு இந்த நீர் தாங்கிகள் பெரிதும் உதவியாக உள்ளது என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
.gif)
