.jpg)
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டமொன்று மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் தயாசிறி திஸ்;ஸ, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பிர் சஜின் வாஸ், கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆரயாப்பட்டன.
.gif)
