Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
திங்கட்கிழமை, 20 மே 2013

பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் சூழல் பாதுகாப்பு திட்டம்


(ஜிப்ரான்)
பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாக சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீடித்து நிலைகக்ககூடிய கரையோர வலய முகாமைத்துவத்துடனான மீளமைப்புத்திட்டம் எனும் கருப்பொருளில் நேற்று மாலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் கே.கோகுலதீபன்,  சூழல் அதிகாரி கே.தர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் ஏற்படும் கடலரிப்பு இயற்கை அனர்த்தங்களை திட்டமிட்ட அடிப்படையில் தடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. கடற்படை, விமானப்படை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பலர் கலந்து கொண்டனர்.






























































Views: 642

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.