.jpg)
(எஸ்.ஜெனி)
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் வருகை தந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் இணைப்பாளர்கள், கிராம சேவகர்கள், நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் இணைப்பாளர் முகமட் றியாஸ் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட அனார்த்தம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக பலற்ற காற்று, கடல் நீர் கிராமங்களுக்குள் செல்வது தொடர்பிலும் இதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனர்த்தத்தின் போது பயன்படுத்தக்கூடிய கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.gif)
