.jpg)
(எஸ்.ஜெனி)
வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வந்த தனியார் பஸ் ஒன்றில் பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையினை கண்டெடுத்த அவ் பஸ்ஸின் உரிமையாளரும் சாரதியும் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தின் ஊடாக உரியவரிடம் இன்று வெள்ளிக்கிழமை ஒப்படைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு மன்னாரில் இருந்து வவுனியாவிற்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுவரும் இப்பஸ், நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி புறப்படவிருந்தது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வந்து பின்னர் வவுனியாவில் இருந்து மன்னார் வருவதற்காக மாசிலமாணி யோசப் என்பவரும் அவரது குடும்பத்தினரும் இப்பஸ்ஸில் ஏறிப் பயணித்துள்ளனர்;.
மன்னார் வந்த இவர்கள் 43,000 ரூபா பணத்துடன் தமது பணப்பையை அவர்கள் பயணித்த இப்பஸ்ஸிற்குள்ளேயே தவறவிட்டுச் சென்றுள்ளனர். தவறவிடப்பட்ட இப்பணப்பையினை கண்டெடுத்த பஸ்ஸின் சாரதியும் உரிமையாளரும்
மன்னார் தனியார் பேரூந்து சங்கத்திடம் ஒப்படைத்தனர்.
இப்பணப்பைக்கு உரியவர் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்திடம் உடன் முறையிட்டு அப்பணப்பையினை அடையாளம் காட்டியுள்ளார். இப்பணப்பையில் 43,000 ரூபா பணம் வீட்டு சாவியும் காணப்பட்டது.
குறித்த பஸ்ஸின் உரிமையாளருக்கு மன்னார் தனியார் பேரூந்து சங்கம் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தது.
.gif)
