(கவிசுகி)வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தி விபத்துக்குள்ளாகிய நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
நல்லூர் இராமநாதன் வீதியைச் சேந்த குறித்த நபர் ஆடியபாதம் வீதியில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் 3000 ரூபா அபராதம் செலுத்துமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டார்.
.gif)
