(கவிசுகி)தனது வயிற்றில் உள்ள சிசுவை அழிப்பதற்காக மருந்து பாவித்த குடும்பப் பெண் ஒருவர் அதீத இரத்தப் போக்கு காரணமாக மரணமாகியுள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பப் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் சிசுவை அழிப்பதற்காக நாட்டு வைத்திய மருத்தை பாவித்துள்ளதாகவும் இதன் காரணமாக தீராத வயிற்றுவலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ், கொழும்புத்துறையைச் சேர்ந்த உதயகுமார் ஷர்மிலா (வயது 21) என்ற பெண்ணே உயிரிழந்தவராவர். இவரது மரணம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
