Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

பாக். பிரதமர் பதவியில் நீடிக்க கிலானி தகுதியற்றவர்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமராக பதவி வகிப்பதற்கு யூஸுப் ராஸா கிலானி தகுதியற்றவர் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி  ஆஷிவ் அலி ஸர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை  பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கம் அமுல்படுத்த தவறியயது. இதனால் கிலானிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பிரதமர் கிலானி குற்றவாளி என  கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், கிலானிக்கு நீதிமன்றம் கலையும் வரையான சிறைத்தண்டனை விதித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக கிலானி மேன்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில் பிரதமர் கிலானி பிரதமராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என அந்நாட்டு பிரதம நீதியரசர் இப்திகார் அலி சௌத்திரி கூறினார்.

"'மேன்முறையீட்டு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சயீட் யூஸுப் ரஸா கிலானி மஜ்லிஸ் ஈ சூரா (நாடாளுமன்ற) அங்கத்தவராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்'" என பிரதம நீதியரசர் இப்திகார் அலி சௌத்திரி நீதிமன்றில் அறிவித்தார்.

"அவர் பிரதமர் பதவியிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். தற்போது பிரதமர் பதவி வெற்றிடமாகவுள்ளது" எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக   ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இன்றிரவு நடைபெறும் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படுவார் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
Views: 1503

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.