வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மத்திய தரைக்கடலில் ஈரானிய யுத்தகப்பல்கள்

 

ஈரானிய யுத்தக்க கப்பல்கள் நேற்று சனிக்கிழமை  சுயஸ் கால்வாய்க்கு  ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார்.

பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979 ஆம் ஆண்டின் ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அந்நாட்டுக் கப்பல்கள் சுயஸ் கால்வாயை கடந்தமை இது இரண்டாவது தடவை எனவும் அவர் தெரிவித்தார்.

எத்தனை கப்பல்கள் இப்பயணத்தை மேற்கொண்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்தில் அவை முன்னர் தரித்துநின்றதாகவும் அவர் கூறினார். 

பெப்ரவரி 4 ஆம் திகதி ஈரானிய நாசகாரி கப்பலான சஹிட் காண்டி மற்றும் விநியோக கப்பலான கார்க் ஆகியன செங்கடலில் தரித்துநின்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அமெரிக்க யுத்தப் கப்பல்கள் பாரசீக வளைகுடாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹேர்முஸ் நீரிணைக்கு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் ஈரானிய யுத்தக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Views: 2323

Comments   

 
0#Mohammed Hiraz2012-02-19 19:42
2012 மத்திய கிழக்கிற்கு அழிவுகாலம் போலும் ஆனால் அங்கே யுத்தம் ஆரம்பிக்க முதலே ஆசிய நாடுகள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன!!!! ஐம்பது வீதமாக விலைவாசிகளின் உயர்வு ஏழ்மை நிலையில் உள்ள எல்லா ஆசிய நாடுகளின் மக்களையும் பாதிப்புகுள்ளாக்கி இருக்கும் இத்தருனத்தில் ஒட்டு மொத்த ஆசிய அரசியல் சக்திகளும் ஆசிய நாட்டு மக்களும் யுத்தத்திற்கு எதிராக அணி திரண்டு யுத்தத்தை நிறுத்தவில்லையேல் பாதிப்பு பலமடங்காக ஆசியாவையே திருப்பிதாக்கும்!!!
Reply
 
 
0#umar raheem2012-02-19 21:07
சபாஸ் .பாராட்டுக்கள்
Reply
 
 
0#Sabee2012-02-20 01:44
மற்றுமொரு உலக யுத்த மனம்.........
Reply
 
 
0#ஜெமீல் ஓட்டமாவடி2012-02-20 07:34
இறந்து வாழ்வதையும் அடிமைப்பட்டு வாழ்வதையும் விட சுயமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக (ஈரானைப் போன்று) போரிட்டு வீர மரணம் எய்துவது அல்லது எதிரிகளைத் தோற்கடித்து வாழ்வது மேல்.
Reply
 
 
0#Deva2012-02-20 22:30
ஈரான் கதை ஈராக் கதை போல, மோதபோவது அமெரிக்காவுடன்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.