(ஜெ.டானியல்)இலங்கை வங்கியின் 73 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் உள்ள சகல வங்கிகளிலும் இன்று வியாழக்கிழமை காலை விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு இலங்கை வங்கிக் கிளையிலும் வாடிக்கையாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு, சிறுவர் சேமிப்புக் கணக்கினைப் பேணுவோருக்கான பரிசில் வழங்கல், ஆகியன நடைபெற்றன.
சுன்னாகம் இலங்கை வங்கியின் ஆண்டு நிறைவு விழா, வங்கியின் பதில் பொது முகாமையாளர் பொ.பாலகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் கே.ஈ.டி.சுமணசிறி சிறப்பு அதிதியாகவும், வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.எம்.மாணிக்கசிங்க கௌரவ விருந்தினராகவும், பன்னாலை கனகசபை வித்தியாலய அதிபர் எஸ்.சிவபாலன் மற்றும் இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நந்தினி சிவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)