2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் தொடரில் இருந்து ஷேன் வோட்சன் விலகியுள்ளார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா அணியின் சகலதுறை வீரர் ஷேன் வோட்சன், உபாதை காரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இருந்து விலகியுள்ளார். 
 
கெண்டைக்கால் தசையில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இந்த தொடரில் இருந்து விலகக் காரணம். டெஸ்ட் போட்டிகளுக்காக பென் ஹில்பன்கோஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கும் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். மிச்சல் மார்ஷ், டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷேன் வோட்சன், உபாதை காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் மிச்சல் மார்ஷ் அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
 
ஷேன் வோட்சன் அண்மைக்காலமாக தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக விளையாட முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக உலகக்கிண்ண அணியில் இடம்பெற முடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கான அணியை தயார் செய்வதில் உபாதைகள் காரணமாக அவுஸ்திரேலியா அணி பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது. அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் ஏற்கனவே இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. 
 
மிச்சல் மார்ஷ் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டால் தகப்பனும் அவருடைய இரண்டு மகன்களும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாக அமையும். இந்தியாவின் லாலா அமர்நாத்தும், அவருடைய புதல்வர்களான மொகிந்தர், சுரிந்தர் ஆகியோரும், நியூசிலாந்தை சேர்ந்த வோல்ட்டர் ஹட்லி மற்றும் அவருடைய புதல்வர்களான ரிச்சர்ட் மற்றும் டேயில் ஆகியோரும் இவ்வாறு முதலில் விளையாடியவர்கள் ஆவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .