.jpg)
இத்தாலியைச் சேர்ந்த மணப்பெண்ணொருவர் தனது திருமணத்தின்போது, 1.8 மைல் (2.9கிலோமீற்றர்) கிலோமீற்றர் நீளமான திருமண ஆடையை அணிந்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
எலினா டீ ஏஞ்செல்ஸ் என்ற இப்பெண் தனது திருமண நாளானது பரப்பராக பேசப்பட வேண்டுமென்பதோடு சாதனையாக பதியப்படவேண்டுமென நினைத்து அவர் இவ்வாறான ஆடையை வடிவமைப்பதற்கு திட்டமிட்டார்.
அவரின் விருப்பத்திற்கேற்ப கியானி மொலோரோ கம்பானியா என்பவர் 2.9 கிலோமீற்றர் நீளமான இந்த ஆடையை வடிவமைத்துக் கொடுத்தார்.
திருமணத்தன்று மணமகள் எலினா வீதியில் திறந்த காரில் சென்றபோது, அவரது வெள்ளை நிற திருமண ஆடையை 600 இற்கும் மேற்பட்டவர்கள் சுமந்த வண்ணம் பின்னால் நடந்து வந்தனர்.
பேரிடினன்ட் புசி என்பவரை எலினா திருமணம் செய்துகொண்டார். இத்தாலியின் நேபிள்ஸிலுள்ள காஸல் டீ பிரின்ஸிப் எனும் நகரில் இத்திருமணம் நடைபெற்றது.
இந்த ஆடை தற்போது உலகின் மிக நீளமான திருமண ஆடையாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆடை வடிவமைப்பாளரான மொலோரோ கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் திருமண ஆடையை வடிவமைக்குமாறு கோரப்பட்டமைக்ககாக நான் கடமைப்பட்டுள்ளேன். நான் தேவாலயத்தில் செல்லும் வழியில் பல்லாயிரக்கணக்க மக்கள் இதை பாராட்டினர்' எனத் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
.gif)
Comments
RSS feed for comments to this post