Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

ரமழான் நற்சிந்தனை (பிரார்த்திப்போம்)

அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையிலான உறவை இறுக்கமாக்கும் ஒரு விடயமே பிரார்த்தனையாகும். ஓர் அடியான் தனது ஆழ்ந்த பணிவையும் ஆழ்ந்த அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு இபாதத்தே துஆவாகும்.  எனவே தான் நபி (ஸல்) அவர்கள் துஆவானது இபாதத்துக்களின் மூளை என கூறினார்கள். ஒரு முஸ்லிம் தனது அறிவாலும், அனுபவத்தாலும், திறமைகளாலும் சாதிக்க முடியாதவற்றை துஆவினால் சாதிக்கிறான்.

இதன் பொருள் செயலை புறக்கணித்துவிட்டு துஆ கேட்க வேண்டும் என்பதல்ல. மாறாக துஆ என்பது அல்லாஹ் எமக்களித்த பெரும் ஆயுதம். எனவே தான் துஆ என்பது விசுவாசியின் ஆயுதம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எமது தேவைகளையும் பிரச்சினைகளையும் அவற்றைப் பற்றி ஆழ்ந்து புரிந்துள்ள அல்லாஹ்விடத்தில் முறையீடு செய்வோம். எந்த சந்தர்ப்பத்திலும் பிரார்த்தனையை கைவிடாதிருப்போம். எமது ஆழ்ந்த பணிவை பிரார்த்தனைக்கூடாக வெளிப்படுத்துவோம்.

நிச்சயமாக எமது பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரிப்பான். எந்தத் தேவையையும் அவனிடம் முன்வைப்பதற்கு தயங்கக்கூடாது. நம்பிக்கையிழக்கவும் கூடாது. உறுதியான நம்பிக்கையோடு ஆழ்ந்த பணிவோடு நாம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் அதற்கு பதிலளிப்பான்.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

நாளைய (05) தொழுகை நேரங்கள்:

ஸஹர் முடிவு: 04:30
சுபஹ்: 04:45
சூரிய உதயம்: 06:05
லுஹர்: 12:18
அஸர்: 03: 38
மஃரிப்: 06:29
இஷா: 07:40
Views: 876

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.