ஸகாதுல் பித்ர் என்பது ரமழான் நோன்புகளை பூர்த்தியாக்கியமைக்காகவும், நோன்பு பெருநாளை முன்னிட்டும் வழங்கும் ஒரு தர்மமாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் இரண்டு கிலோவும் நூற்று எழுபத்தாறு கிராம் அரிசியை அல்லது அதற்கு பெறுமதியான பணத்தை ஏழைகளுக்காக பெருநாள் தொழுகைக்கு முன்னர் வழங்கும் தர்மமாகும்.
ஸகாதுல் பித்ரை இஸ்லாம் இரண்டு நோக்கங்களுக்காக விதியாக்கியுள்ளது. அவ்விரண்டும் நோன்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளல், பெருநாள் தினத்தை ஏழை எளியவர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடுதல் என்பவையாகும்.
இறை தூதர் (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை நோன்பாளிக்கு பாவ பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாக வேண்டும் என்பதற்காகவும் விதியாக்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே ரமழானின் இறுதி காலங்களில் நாம் ஸகாதுல் பித்ரை வழங்கி எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள தயாராக வேண்டியுள்ளது. ஏழை எளியவர்களது இன்பத்தில் பங்குகொண்டு அதனூடாக இறைதிருப்தியை பெற்றுக்கொள்வோமாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை
நாளைய (30) தொழுகை நேரங்கள்:
ஸஹர் முடிவு: 04:32
சுபஹ்: 04:47
சூரிய உதயம்: 06:03
லுஹர்: 12:13
அஸர்: 03: 19
மஃரிப்: 06:19
இஷா: 07:30
.gif)